Published : 05 Dec 2020 06:53 AM
Last Updated : 05 Dec 2020 06:53 AM

வேளாண் சட்டங்களை நீக்க கோரி டிச.8-ல் நாடு தழுவிய 'பந்த்'- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத் தப் போராட்டத்துக்கு விவசாய சங் கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசு கடந்த செப்டம் பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் 9 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த டெல் லியே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க பிரதி நிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங்
தோமர் 3 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையிலும் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று மீண்டும்
(டிச.5) பேச்சுவார்த்தை நடை பெறவுள்ளது. இதுகுறித்து விவ சாய அமைப்பினர் நேற்று ஆலோ சனை நடத்தினர். பின்னர், பார
திய கிசான் சங்கத் தலைவர்

நரேஷ் திகாய்த் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

அரசு இதுவரை நடத்திய பேச்சு வார்த்தையில் எங்களுக்கு நம் பிக்கை அளிக்கும் விதமாக எந்த வாக்குறுதியையும் அளிக்க வில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் பிரதான கோரிக்கை. ஆனால், இதற்கு அரசு தரப்பு தயா
ராக இல்லை என தெளிவாக தெரிகிறது. எனவே, எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்து வதற்கான நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளோம்.

இதன் முதல்கட்டமாக, நாளை (இன்று) நடைபெறும் பேச்சுவார்த் தையில் எங்கள் கோரிக்கை ஏற்கப் படாவிட்டால், வரும் 8-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு நரேஷ் திகாய்த் கூறினார்.

மம்தா ஆதரவு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக விவ சாயிகளின் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல் வருமான மம்தா பானர்ஜி பேசி னார். விவசாயிகளின் போராட்டத் துக்கு தனது கட்சி உறுதுணையாக இருக்கும் என அவர் உறுதி
அளித்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

‘திருத்தம் மேற்கொள்ளத் தயார்’

குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிறுத்துவிடும் என்பதே விவசாயிகளின் போராட் டத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுகுறித்து அரசு தரப்பில் விளக்கம் அளித்தபோதும் விவசாயிகளுக்கு அரசின் வாக் குறுதியில் நம்பிக்கை ஏற்பட வில்லை. இந்நிலையில் குறைந்த பட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகள் சந்தேகம் எழுப்பும் சட்ட அம்சத்தில் திருத்தம் மேற் கொள்ள அரசு தயாராக இருப்ப தாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x