பிஎப்ஐ தலைவரின் அலுவலகங்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை: சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் மீது நடவடிக்கை

அப்துல் சலாம்
அப்துல் சலாம்
Updated on
1 min read

கேரள மாநிலம் திருவனந்தபும், கொச்சியில் பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) தலைவர் அப்துல் சலாமின் வீடுகள்உள்ளன. திருவனந்தபுரத்தில் பிஎப்ஐ தலைமை அலுவலகம் உள்ளது.

இந்நிலையில், அவரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலும் பிஎப்ஐ அலுவலகம் அமைந்துள்ள உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிஹார், மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் நேற்று சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகம், திருவல்லிக்கேணி மற்றும் மதுரை, தென்காசியில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடந்தது. 5 நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

பிஎப்ஐ கட்சிக்கு வெளிநாடு களில் இருந்து சட்டவிரோதமாக பணம் வருவதாக புகார் எழுந்தது.

பிஎப்ஐ-யின் 15 வங்கிக் கணக்குகளிலும், அதன் கிளை அமைப்பான ரெஹாப் இந்தியா பவுண்டேஷன் என்ற அரசுசாரா அமைப்பின் கணக்கிலும் சுமார் ரூ.1.04 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி வரையிலான காலத்தில் இந்தப் பணம் டெபாசிட் செய்யப் பட்டது. இந்தத் தொகையைத்தான் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பிஎப்ஐ பயன்படுத்தியதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே நேற்று அமலாக்கப்பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்தசோதனையின்போது சில ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in