

மாற்றுத்திறனாளிகள் எளிதில் கையாளும் வகையில் கட்ட மைப்பை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள 4,800 முக்கிய அரசு கட்டிடங் கள், அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், 75 ரயில் நிலை யங்கள், பொதுப்போக்குவரத்து வாகனங்களில் 25 சதவீதம், 3,000 பொதுப் பயன்பாட்டு இணைய தளங்கள் ஆகியவற்றில், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ‘பயன் பாட்டுக்கு ஏற்ற இந்தியா’ என்ற தலைப்பிலான பிரச்சார திட்டத்தின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்படுகிறது.
பயன்பாட்டுக்கு ஏற்ற சூழல், போக்குவரத்து, தகவல்கள் என்ற மூன்று அடிப்படையில் இந்த பிரச்சாரத் திட்டம் வகுக்கப்பட்டுள் ளது. இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத்திறனாளிகள். இவர் களும் மற்றவர்களைப் போல அனைத்தையும் கையாள, பயன் படுத்தத் தக்க வகையில் மாற்று வதே இத்திட்டத்தின் நோக்கம்.
48 நகரங்களில் உள்ள தலா 100 முக்கிய அரசு அலுவலகங்களில் உள்ள உள்கட்டமைப்புகளை மாற்றுத்திறனாளிகளும் பயன் படுத்தத்தக்க வகையில் வரும் 2016 ஜூலைக்கும் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
“48 நகரங்களைத் தேர்வு செய்துள்ளோம். அந்நகரங்களில் உள்ள தலா 100 அரசு கட்டிடங் களின் பட்டியலை மாநில அரசு களிடம் கேட்டுள்ளோம். இங்கு தணிக்கை செய்தபின், மாற்றுத் திறனாளிகளும் எளிதில் பயன்படுத் தத்தக்க வகையில் மாற்றுவோம்” என சமூக நீதித்துறை இணைச் செயலாளர் முகேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தின் 2-ம் கட்டமாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்துகள் உள் ளிட்ட பொது போக்குவரத்துகள் மாற்றத்துக்கு உட்படுத்தப்படும்.
முகேஷ் ஜெயின் மேலும் கூறும்போது “போக்குவரத்தை மாற்றுத்திறனாளிகளால் அவ்வளவு எளிதில் பயன்படுத்த முடிவதில்லை. சர்வதேச விமான நிலையங்கள் 2016 ஜூலைக்கு முன்பாகவும், உள்ளூர் விமான நிலையங்கள் 2019 ஜூலைக்கு முன்பாகவும் மாற்றுத் திறனாளி களுக்கு ஏற்ற வகையில் வசதிகள் அமைக்கப்படும். ஏ1, ஏ, பி வகை ரயில் நிலையங்கள் 75 எண்ணிக்கை உள்ளன. இவையும் மாற்றப்படும். 25 சதவீத பேருந்துகளிலும் மாற்றம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.