Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும்: மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் கூட்டாக எச்சரிக்கை

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் விரைவில் நாடு தழுவிய போராட்டத் தில் ஈடுபடுவோம் என்று விவசாய அமைப்புகள் எச் சரிக்கை விடுத்துள்ளன.

மத்திய அரசுடன் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள சூழலில், விவசாய அமைப்புகளின் இந்த அறி விப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 27-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். டெல்லி புறநகர் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டெல்லி முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியின் 5 எல்லைகளை முற்றுகையிடப் போவ தாக விவசாய அமைப்புகள் அறிவித் துள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து, போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், முடிவு எட்டப்படாத தால் இன்று 3-ம் கட்ட பேச்சு வார்த் தைக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 30 பெரிய விவசாய சங்கங் களின் தலைவர்கள் நேற்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு, கிராந்திகாரி கிசான் விவசாய சங்கத் தின் தலைவர் தர்ஷன் பால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி யில் போராடி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வழியை ஆராயாமல் எங்களுக்குள் சிண்டு முடியும் வேலை யில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பஞ் சாப் பை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்துவது போன்ற மாயபிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இது, விவசாய சங்கங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி யாகும். இந்த கீழ்த்தரமான வியூகத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு பஞ்சாப் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களையும் அரசு அழைக்க வேண்டும். எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் வேளாண் சட்டங்களை நீக்குவது மட்டும்தான் எங்கள் கோரிக்கையாக இருக்கும். எனவே. அந்த சட்டங்களை அரசு உடனடியாக நீக்க வேண்டும். இதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தினால் இது நாடு தழுவிய போராட்டமாக வெடிக்கும்.

இதன் முதல்கட்டமாக, நாளை (இன்று) மகாராஷ்டிரா முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அப்போது, நரேந்திர மோடி அரசின் கொடும்பாவிகள் எரிக் கப்படும். வரும் 5-ம் தேதி குஜராத் தில் போராட்டங்கள் நடக்கும். இதே போல், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு தர்ஷன் பால் கூறினார்.

சரக்கு லாரிகள் ஸ்டிரைக்

இதனிடையே, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சரக்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு நேற்று வெளியிட்டு அறிக்கையில், ‘நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சரக்கு லாரி சங்கங்களும் களமிறங்க முடிவு செய்துள்ளன. அதன்படி, வட மாநிலங்கள் முழுவதும் வரும் 8-ம் தேதி முதல் சரக்கு லாரிகள் இயக் கப்படாது. இது படிப்படியாக தென் மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x