Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

கிரிக்கெட் சூதாட்ட கடனை அடைக்க தாய், தங்கையை கொலை செய்த பொறியியல் மாணவர் கைது

கிரிக்கெட் சூதாட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையைகொலை செய்த பொறியியல் கல்லூரி மாணவரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர்.

ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்தவர் சாய்நாத் (23). இவர் எம்.டெக். 2-ம் ஆண்டுபடித்துக்கொண்டே ஒரு வாகனவிற்பனை ஷோரூமில் பணியாற்றிவந்தார். இவரது தந்தை பிரபாகர் ரெட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகையான ரூ.20 லட்சம், தாயார் சுனிதாவின் (44) பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சாய்நாத் சமீப காலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் லட்சக்கணக்கில் கடன்வாங்கி சூதாட்டத்தில் செலவழித்துள்ளார்.

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்பக்கேட்டு நெருக்கடி கொடுத்துள் ளனர். இதனால் தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விட்டால், வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 23-ம் தேதிகாலை, உணவில் பூச்சி மருந்தைகலந்துவிட்டு, வேலைக்குச் சென்றுவிட்டார். அந்த உணவை சாப்பிட்ட சுனிதாவும் அனுஷாவும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மாலையில் வீடு திரும்பிய சாய்நாத், இருவரையும் காந்தி அரசுமருத்துவமனையில் சேர்த்தார்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி தங்கை அனுஷாவும், 28-ம் தேதி தாயார் சுனிதாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் சாய்நாத்தின் நடத்தையில் சந்தேகம் அடைந்தஉறவினர்கள் மெட்ச்சல் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணையில் சூதாட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்ததை சாய்நாத் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாய்நாத் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x