மாடல் அழகி பூனம் பாண்டே கைது

மாடல் அழகி பூனம் பாண்டே கைது
Updated on
1 min read

சர்ச்சைகளுக்கு பேர்போன மாடல் அழகி பூனம் பாண்டே, பொது இடத்தில் அரைகுறை ஆடைகளுடன் நாகரிகமற்ற வகையில் நடந்து கொண்டதாக மும்பையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

உடம்பு தெரியும் வகையில் அரை குறை ஆடை அணிந்தபடி யாருக்கோ காத்திருப்பதுபோல தனிமையில் அவர் இருந்த தாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இது போன்ற சர்ச்சையில் அவர் பிடிபடுவது இது முதல்முறையல்ல.

நாகரிக சமூகம் அருவருப்பாக கருதக்கூடிய வகையில் ஆபாசமான வகையில் சமூக வலைத் தளங்களில்அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு தன்னைப் பற்றி பரபரப்பாக பேச வைப்பவர் அவர். அநாகரிமாக பொது இடத்தில் நடந்துகொண்டதாக கைது செய்த போலீஸார் கடுமையாக எச்சரித்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் தன்னை கைது செய்தது முறையல்ல என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் அவர். காரில் அமர்ந்து பாடல் கேட்பது அநாகரிக செயல் அல்ல. என்னைப்பற்றி இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதை தயவு செய்து தவிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மும்பை புறநகர் பகுதியில் உள்ள மீர் ரோட்டில் அநாகரிகமான வகையில் நடந்து கொண்டார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.பிரிவு 110 (பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல்) மற்றும் மகா ராஷ்டிர காவல் துறை சட்டம் பிரிவு 117 ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2011 ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி கோப்பையை வென்றால் தனது ஆடை களை களையத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in