

கடந்த 1927-1986-ம் ஆண்டு வரையிலான 60 ஆண்டுகளில் பாகிஸ்தானில் மத நிந்தனை தொடர்பாக வெறும் 7 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத நிந்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1986-ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட மாற்றம் என்ன? இது ஏன்? இதுபற்றி பிறகு பார்க்கலாம்.
அதற்கு முன்பு இந்தியாவில் எழுத்தாளர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை அடுத்தடுத்து திருப்பி கொடுத்து வருகின்றனரே, அதற்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்த மாதிரியான பதில் வந்திருக்க வேண்டும்? மாட்டிறைச்சி உண்ட தான விவகாரத்தில் உத்தரப் பிரதே சத்தில் ஒருவர் அடித்து கொல்லப் பட்டது துரதிருஷ்டவசமானது, வேதனையானது என்று மோடி கூறியிருக்கிறார். ஆனால், எழுத் தாளர்களின் எதிர்ப்புகளை இதுவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த மவுனத்துக்கு காரணம் இல்லாமல் இருக்காது எனலாம்.
எல்லாவற்றுக்கும் பிரதமர் பதில் சொல்ல வேண்டிய தேவை யில்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். இன்னொரு விஷயம், எழுத்தாளர்கள் போலி யாக நடிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியின்போது வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டபோது எழுத் தாளர்கள் இதுபோல் விருதுகளை திருப்பித் தரவில்லையே என்று பலர் கேட்கின்றனர். மூன்றா வது, அரசாங்கத்திடம் இருந்து எழுத்தாளர்கள் விருது பெற வில்லை, இலக்கிய அகாடமி யில் இருந்துதான் பெற்றுள்ளனர். எழுத்தாளர்கள் அரசை எதிர்க்கவில்லை, அகாடமியை தான் எதிர்க்கின்றனர் என்கின்றனர்.
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், எழுத்தாளர்களின் செயல் நாடகத்தனமானது. அவர் கள் நன்கு யோசித்து திட்ட மிட்டு விருதுகளை திருப்பித் தருவ தாகவே நினைக்கிறேன். ஏனெனில், இந்திய எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் இல்லை. இலக்கியமும் ஓவியமும் தகவல் தொடர்புக்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளன. ஆனால், அவற்றின் தாக்கம் இந்த சமூகத்தில் உடனடியாக ஏற்படுவதில்லை.
எழுத்தில் தங்கள் எதிர்ப்புகளை காட்டுவதும் அந்த சமூக கலாச்சார மக்களைப் பொறுத்தது. படிக்கும் ஆர்வமுள்ள, தகவல்களை தெரிந்து கொள்ளும் மக்கள் நிறைந்த சமூக கலாச்சாரத்தில் எழுத் துக்கு வலிமை உண்டு. 19-ம் நூற் றாண்டில் ரஷ்ய எழுத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை நாவல் கள் மூலம் நாட்டு மக்களுக்கு எடுத்து ரைத்தனர். அந்த நிலை இந்தியாவில் இல்லை. தொலைக்காட்சிகளும் வீடியோக்களும் உள்ளதால் அந்த இடத்தை எழுத்துகளால் பிடிக்க முடியாது என்பதை அவை உறுதி செய்கின்றன.
இந்த சூழ்நிலையில் எழுத் தாளர்கள் தங்கள் எழுத்து பணியை நிறுத்துவதற்கு பதில் அல்லது எழுத்துகள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பதில் தங்களுக்கு இந்த சமூகத்தால் வழங்கப்பட்ட விருதுகளை கவுர வத்தை திருப்பித் தர வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதன் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகள் அல்லது செயலற்ற தன்மைகளால் கோபம் அடைந்துள்ளதை எழுத்தாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதுதான் இங்கு முக்கியம். சமூகத்துக்கு அரசு என்ன செய்கிறதோ அதை எழுத்தாளர்கள் எதிர்க்கின்றனர். ‘பாரதிய ஜனதா கட்சியையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காத வர்கள், விருதுகளை திருப்பித் தருகின்றனர்’ என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலை நமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.
எனவே, எழுத்தாளர்கள் விருது களை திருப்பித் தருவது நாடகம் என்றோ, அரசியல் காரணங் களுக்காக தூண்டிவிடப்பட்டது என்றோ சொல்ல முடியாது. எழுத் தாளர்கள் மவுனமாக தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் நிலையில், அதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆனால், மோடி தொடர்ந்து மவுனம் காப்பது வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றிய மதிப்புக்கு சிறிது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, லண்டன் பிபிசி நிகழ்ச்சிக்காக என்னை பேட்டி கண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதாக அவர்கள் கருதுகின்றனர். நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே போவதை நாம் பார்க்கிறோம்.
ஆனால், ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடியும். இந்துத்துவா மூலம் வன்முறை ஏற்பட்டிருந்தால், அந்த விஷயத்தில் கருத்து சொல் லாமல் மவுனமாக இருப்பதுதான் மோடியின் ஸ்டைல். குஜராத்தில் 10 ஆண்டு காலம் மோடி ஆட்சியில் இருந்தபோதும் இதுபோல்தான் கேள்விகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்.
இப்போது முதலில் சொன்ன விஷயத்துக்கு வருவோம். கடந்த 1986-ம் ஆண்டு பாகிஸ்தானில் என்ன நடந்தது? அங்கு மத நிந்தனைக்கு மரண தண்டனை கொண்டு வரப்பட்டது. இது சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது மக்களிடம் சகிப்புத் தன்மை குறைவதற்கு காரணமாகி விட்டது. அதனால் திடீரென மத நிந்தனை வழக்குகள் அதிகரித்தன.
இந்தியாவிலும் பசுவதை சட்டம் என்ற பெயரில் நெருப்புடன் பாஜக விளையாடுகிறது. பாகிஸ்தானில் நடந்தது போலவே இந்திய சமுதாயத்திலும் அடுத்தடுத்து வன்முறைகள் தூண்டி விடப்படு வதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே, எழுத்தாளர்கள் பிரச்சி னையில் பிரதமர் மோடி தலையிடுகிறாரோ இல்லையோ, ஆனால், இந்துத்துவா கலாச்சார கொள்கையை ஆய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார். மேலும், இந்துத்துவா என்பது அவரது வளர்ச்சி திட்டங்களுக்கு உதவுகிறதா, இந்தியா மீது நன்மதிப்பு ஏற்பட உதவுகிறதா என்பதை ஆய்வு செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும்.
இந்துத்துவா மூலம் வன்முறை ஏற்பட்டிருந்தால், அந்த விஷயத்தில் கருத்து சொல்லாமல் மவுனமாக இருப்பதுதான் மோடியின் ஸ்டைல். குஜராத்தில் 10 ஆண்டு காலம் இதுபோல்தான் கேள்விகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்.