Last Updated : 10 Oct, 2015 08:39 AM

 

Published : 10 Oct 2015 08:39 AM
Last Updated : 10 Oct 2015 08:39 AM

அரசியல் கட்சிகளின் பெயரில் ஆம் ஆத்மிக்கு டெல்லியில் நிலம் ஒதுக்க முயற்சி: கேஜ்ரிவால் அமைச்சரவை முடிவால் புதிய சர்ச்சை

டெல்லியில் கடந்த 2013-ல் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட் டது ஆம் ஆத்மி கட்சி. இக்கட்சிக்கு டெல்லியின் முக்கியப் பகுதியான கன்னாட் பிளேஸ், ஹனுமான் சாலையில் வாடகைக் கட்டிடத்தில் அலுவலகம் தொடங்கப்பட்டது.

அப்பகுதிவாசிகள், ஆம் ஆத்மி கட்சியினரால் தங்களுக்கு ஏற் பட்டுள்ள அசவுகரியம் குறித்து அளித்த புகாரைத் தொடர்ந்து, கட்சி அலுவலகம் ராஜேந்தர் நகரின் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்காக அரசு நிலம் ஒதுக்கிக் கொள்ள வேண்டி, கடந்த வாரம் கூடிய டெல்லி மாநில அமைச்சர வையில் முக்கிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன்படி டெல்லி மாநில அரசியல் கட்சிகளுக்காக அரசு நிலம் ஒதுக்க வேண்டி சில நெறிமுறைகளை அமைச்சரவை வகுத்துள்ளது. இதற்கான அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு இல்லை என்பதால், மாநில அரசு - துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் இடையே மேலும் ஒரு மோதல் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது, “இங்கு அரசு நிலம் ஒதுக்கு வதற்காக டெல்லி வளர்ச்சி ஆணை யம் மற்றும் நிலம் மற்றும் கட்டிடத் துறை ஆகிய இரண்டும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுகின்றன. டெல்லி அரசு பொதுப்பணிக்காக நிலம் ஒதுக்க வேண்டுமானால் அதன் துணை நிலை ஆளுநர் அல்லது மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையை அணுக வேண்டும்” என்றார்.

டெல்லியில் அரசியல் கட்சி களுக்கு அரசு நிலம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத் துடன் இணைந்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை ஏற்கெனவே சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி சுமார் 10 பிராந்திய மற்றும் தேசிய கட்சிகளுக்கு டெல்லியில் நீண்டகால குத்தகைக்கு நிலம் தரப்பட்டுள்ளது. இதன்படி ஆம் ஆத்மி கட்சிக்கு நிலம் கிடைக்காது என்பதால் அக்கட்சி அரசு புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது. எனவே, நிலம் ஒதுக்கும் அதிகாரம் இல்லாத டெல்லி அரசுக்கு அதன் அமைச்சரவை வகுத்த நெறிமுறைகளால் எந்தப் பலனும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

டெல்லியின் முக்கியப் பகுதி களில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப் பெரிய நிலம் ஒதுக்கப்பட்டு கட்டிடங் கள் கட்டப்பட்டுள்ளன. காங்கிர ஸுக்கு தீன்தயாள் உபாத்யா மார்கில் 5 மாடிக் கட்டிடம் உள்ளது. பண்டிட் பந்த் மார்கில் பாஜகவுக்கு கட்டிடம் உள்ளது.

ஆனால் இவ்விரு கட்சிகளும் டெல்லி அரசில் தற்போது எந்த முக்கியத்துவமும் இல்லாத நிலை உள்ளது. தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்த காங்கிரஸுக்கு டெல்லி சட்டப்பேரவையில் ஓர் உறுப்பினர் கூட இல்லை. பாஜவுக்கு உறுப்பினர் எண்ணிக்கை வெறும் மூன்றாக குறைந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு 67 உறுப்பினர்கள் இருப்பதால் மற்ற இரு கட்சிகளை போல் தமக்கும் அரசு நிலம் ஒதுக்க அக்கட்சி அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இக் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவை யில் 4 எம்.பி.க்கள் இருப்பதால் டெல்லியில் வி.பி ஹவுசின் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஓர் இரட்டை வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலம் ஒதுக்கும் அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு இல்லை என்பதால், மாநில அரசு - துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் இடையே மேலும் ஒரு மோதல் உருவாகலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x