விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்- ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்- ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவிப்பு
Updated on
1 min read

மத்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார்.

இவ்விழாவில் அவர் பேசும்போது, “மாநில அரசின் நலத்திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு அது உரிய பயனாளிகளைச் சென்றடையும். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்களில் ஒன்றான முதல்வர் விவசாயி நலத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு இனி ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும். மத்தியபிரதேச மாநிலம்தான் எனது கோயில். மாநில மக்கள்தான் எனது கடவுள். நான் அந்தக் கடவுளின் பூசாரியாக இருக்கிறேன். மாநில மக்கள் அனைவரும் தங்களது மகன், மகள்களை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும். ஐஐஎம், ஐஐடி, மருத்துவம் உள்ளிட்ட எந்தப் படிப்பாக இருந்தாலும், கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்காக அரசே அந்தக் கட்டணத்தைச் செலுத்தும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in