தெலங்கானாவில் பஸ் விபத்து: 10 பேர் பரிதாப பலி

தெலங்கானாவில் பஸ் விபத்து: 10 பேர் பரிதாப பலி
Updated on
1 min read

தெலங்கானா மாநிலத்தில் நேற்று மதியம் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பஸ் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் புவன கிரியில் இருந்து நல்கொண்டாவுக்கு 45 பயணிகளுடன் சென்று கொண் டிருந்த அரசு பஸ் நேற்று மாலை ராமண்ணாபேட்டை மண்டலம் இந்திரபால நகரம் எனும் இடத்தில், எதிரே வந்த லாரி மீது மோதி விபத் துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர் மல்லாரெட்டி, நடத்துநர் ராஜேஷ், உட்பட 10 உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். இவர்களில் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரு வயது குழந்தை சாத்வி, 5 பெண்கள் அடங்குவர். லேசான காயமடைந்தவர்கள் ராமண்ணா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாய மடைந்தவர்கள் ஹைதராபாத் காமிநேனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரி அதிவேகமாக வந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் பலியானவர்களுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சட்டப்பேரவையில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். சம்பவ இடத்துக்கு அமைச்சர்கள் நாயினி நரசிம்மா ரெட்டி, மஹீந்தர் ரெட்டி, ஜெகதீஷ்வர் ரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

விபத்தில் பலியானவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தெலங்கானா தலைவர் கிஷன் ரெட்டி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான அரசு பஸ். அடுத்த படம்: லாரி மீது மோதியதில் சேதமடைந்த பஸ்ஸின் உள்பகுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in