வில்வித்தை வீரர் கபிலுக்கு கரோனா தொற்று உறுதி

வில்வித்தை வீரர் கபிலுக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read

புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் நடைபெற்றுவரும் தேசிய வில்வித்தை பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள வீரர் கபிலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கபில், தொடர்ந்து மருத்துவ குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். 18 நாட்கள் விடுமுறையில் இருந்து மீண்டும் பயிற்சி முகாமிற்கு திரும்புகையில், இந்திய விளையாட்டு ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கபிலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தனிமையில் இருந்த அவர், பயிற்சி முகாமில் உள்ள எவருடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in