கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவின் ஓராண்டு ஆட்சி சாதனையா.. வேதனையா?

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவின் ஓராண்டு ஆட்சி சாதனையா.. வேதனையா?
Updated on
1 min read

கர்நாடக முதல்வராக சித்த ராமையா பதவியேற்று செவ்வாய்க் கிழமையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு ஆட்சியில் பல்வேறு சாதனைகளை படைத்த தாக காங்கிரஸாரும், வேதனை களையே பரிசளித்துள்ளதாக பா.ஜ.க.உள்ளிட்ட எதிர்க்கட்சியின ரும் காரசாரமான வாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 13-ம் தேதி கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார்.

ஓராண்டு ஆட்சி காலத்தை நிறைவு செய்திருக்கும் சித்தராமையாவிற்கு செவ்வாய்க் கிழமை காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில்,'' கடந்த ஓராண்டில் காங்கிரஸ் அரசு கர்நாடகாவின் வளர்ச்சிக்காகவும், கன்னட மொழி யின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி யுள்ளது. ஏழைகள், பழங்குடி யினர், தலித்துகள், நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டுக் காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டு சாதனைகளை புத்தகமாக‌ தொகுத்து வரும் 19-ம் தேதி வெளியிடப்படும். அதே நேரத்தில் ஊழலற்ற நேர்மையான, அடித்தட்டு மக்களுக்கான சமூகநீதியுடன் கூடிய‌ நல்லாட்சி தொடரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

சித்தராமையாவின் ஓராண்டு ஆட்சிக் குறித்து கருத்து தெரிவித் துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் பிரஹலாத் ஜோஷி,'' சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முறையாக நடக்கவில்லை.முதல்வர்,அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் என அனைவருமே முழுமையாக செயல்படவில்லை. இதனால் தேசிய அளவில் கர்நாடகா மிகவும் பின்தங்கியுள்ளது.

மின் கட்டண உயர்வு,பஸ் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களின் தலையில் பேரிடியாக விழுந்திருக்கிறது.விலைவாசி உயர்வு, குடிநீர்த் தட்டுப்பாடு, மின்வெட்டு என அனைத்தும் கர்நாடக மக்களுக்கு தீராத வேதனையை அளித்திருக்கிறது. எனவே சித்தராமையாவின் ஆட்சி சாதனையல்ல, தீராத வேதனையே'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in