

இந்தியா அதன் பருவநிலை நடவடிக்கைகளுக்கான இலக்குகளை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
"பருவநிலை மாற்றம் குறித்த அறிவுசார் தளத்தை" மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார்.
பல்வேறு அமைச்சகங்கள் எடுத்த பருவநிலை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அளிப்பதற்கான ஒரே தளமாக இது இருக்கும். இதன் மூலம் இந்த நடவடிக்கைகள் குறித்த சமீபத்திய தகவல்களை பயனர்கள் பெறலாம்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியா அதன் பருவநிலை நடவடிக்கைகளுக்கான இலக்குகளை எட்டியுள்ளது என்று கூறினார்.