

கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 5 இந்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
இந்தத் தேர்தலில் 51 இடங்களில் போட்டியிடும் அக்கட்சி, 10 சதவீத இடங்களில் இந்துக்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.
சுன்னம் ராஜ் (புரனபுல்), கே.தாரா பாய் (பலக்னுமா), மந்தகிரி சுவாமி யாதவ் (கார்வான்), ஜதல ரவீந்திரா (ஜம்பக்) மற்றும் எடியலா ராஜேஷ் கவுட் (ரங்காரெட்டி நகர்) ஆகியோர் அந்த 5 இந்து வேட்பாளர்கள் ஆவர்.
கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் இக்கட்சி சார்பில் 4 இந்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் 2 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.