Last Updated : 27 Nov, 2020 01:05 PM

 

Published : 27 Nov 2020 01:05 PM
Last Updated : 27 Nov 2020 01:05 PM

மற்ற மதத்தவர்களை பாஜக தலைவர்கள் மணம் புரிந்தது ‘லவ் ஜிகாத்’ இல்லையா? –சத்தீஸ்கர் முதல்வர் பகேல் கேள்வி

பாஜக ஆளும் மாநிலங்களில் மதம் மாறி மணம்புரிபவர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. இப்பிரச்சனையில், மற்ற மதத்தினரை பாஜக தலைவர்கள் மணம் புரிவது ‘லவ் ஜிகாத்’ இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் பகேல்.

சமீப காலமாக மற்ற மதத்தினரை முஸ்லிம்கள் மதம் மாற்றும் நோக்கத்துடன் மணம் புரிவதாகப் புகார் எழுந்து வருகிறது. ‘லவ் ஜிகாத்’ என பெயரில் குறிப்பிடப்படும் இச்சம்பவங்களுக்கு எதிராக பாஜக ஆளும் உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

தம் ஆதரவிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அரசிடமும் பாஜக இச்சட்டம் கொண்டுவர வலியுறுத்துகிறது. இதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்தர் பகேலிடம் ‘லவ் ஜிகாத்’ பற்றிய ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதல்வர் பூபேந்தர் பகேல் அளித்த பதிலில் பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பகேல் கூறும்போது, ‘‘பாஜகவின் மூத்த தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கூட மற்ற மதத்தினருடன் திருமண உறவு வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் நான் பாஜக தலைவர்களிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். நீங்கள் செய்யும் திருமணங்களில் மட்டும் லவ் ஜிகாத் இல்லையா?’’ எனப் பதிலளித்தார்.

சில மாதங்களுக்கு முன் உ.பி.யின் கான்பூரில் தொடர்ந்து நடைபெற்ற திருமணங்களில் லவ் ஜிகாத் புகார் எழுந்தது. இதனால் அதன் 22 காவல் நிலையப்பகுதிகளின் சமீபகால இந்து-முஸ்லிம் திருமணங்கள் மீது சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரவில் நடந்த விசாரணையின் அறிக்கை கான்பூர் பகுதி ஏடிஜிபியான மோஹித் அகர்வாலால் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தவகையின் 14 திருமணங்களில் பெரும்பாலனவை இந்து- முஸ்லிம் இருதரப்பினரின் சம்மதத்துடனே நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x