

இந்தியாவில் சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் சராசரி தொற்று அளவும் உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,489 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 92,66,706 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 524 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,35,223 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 86,79,138 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36,367 ஆகும்.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,52,344 ஆக உள்ளது. தொடர்ந்து கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் சராசரி தொற்று அளவும் உயர்ந்து வருகிறது.