

புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இன்று காலை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய டெல்லியில், மத்திய அரசின் அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இன்று காலை 8.35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தீ வளாகத்தின் நான்காவது மாடியில், குளிர் சாதனப் பெட்டியில் கசிவு ஏற்பட்டதால் விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது. 8.40 மணிக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சாஸ்திரி பவனில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மே 21ம் தேதியன்று சாஸ்திரி பவனின் ஏழாவது மாடியில் தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.