

மின்சாரத்தை மிச்சப்படுத்த, மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு மானிய விலையில் 2 கோடி எல்இடி பல்புகள் வழங்க ஆந்திர மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில மின்வாரிய துறை தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ரெட்டி திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதா வது: ஆந்திர மாநில அரசு’அனைவ ருக்கும் மின்சாரம்’ திட்டத்தின் கீழ் ரூ. 54,362 கோடி செலவில் 13 மாவட்டத்தில் ஒரு எல்இடி பல்பு ரூ. 10 வீதம் மானிய விலையில் 2 பல்புகளை வழங்கி வருகிறது. முதற்கட்டமாக குண்டூரில் இத் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பல மாவட்டங்களில் வெற்றிகர மாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாதத்துக்கு ஒரு வீட்டுக்கு 52 யூனிட் மின்சாரம் மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் 2 கோடி பல்புகள் வழங்கப்பட உள்ளது. இவை மூலம் 93.2 லட்சம் குடும்பத்தினர் பயனைடைவர்.
இத்திட்டம் சித்தூர் மாவட் டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் எல்இடி பல்புகள் விநியோகம் செய்யப்படும். தற்போது, விசாகப்பட்டினம் மாநகராட்சி முழுவதும் எல்இடி பல்புகள் மட்டுமே உபயோகப் படுத்தப்படுகின்றன. இதனால் 48 சதவீத மின்சாரம் மிச்சப்படுத்தப் படுகிறது.
விரைவில் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தற்போது தினமும் 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படு கிறது. விரைவில் 9 மணி நேரமாக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள் ளார். இவ்வாறு அவர் கூறினார்.