

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினை தொடர்ந்து, நேற்று மாலை திருமலையில் உற்சவர் மலையப்ப சுவாமி பார்வேட்டை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டு தோறும் திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபம் அருகே பார்வேட்டை உற்சவம் நடைபெறும்.
நேற்று பார்வேட்டையின்போது உற்சவரான மலையப்ப சுவாமி கத்தி, கேடயம், கதாயுதம், அம்பு, வில் தரித்து ஊர்வலமாக கோயில் வளாகத்தில் இருந்து பார்வேட்டை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் உற்சவர் வேட்டையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.