

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் 8-வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் வீரர்கள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் இந்திய ராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரில் எல்லையின் பூஞ்ச் மாவட்டத்தின் நாங்கி தெக்ரி பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக துப்பாக்கிகளால் சுட்டனர்.
அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் இரு தரப்பினருக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்றார்.
இதன்மூலம் கடந்த 3 வாரங்களில் 8- வது முறையாக பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதலை நடத்துயுள்ளது.