

கேரளத்தில் இன்று 5,772 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6,719 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுகுறித்துக் கேரள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:
''கேரளாவில் இன்று 5,772 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 53 சுகாதார ஊழியர்களும், 4,989 பேர் தொடர்பு மூலமும், 639 பேருக்கு நோய்த்தொற்றின் ஆதாரம் தெரியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 6,719 தொற்று நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கரோனா தொற்றினால் இறப்பு எண்ணிக்கை இன்று 2,022 ஆக இருந்து 25 சமீபத்திய இறப்புகளாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 60,210 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 58,09,226 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இன்று தொற்று உறுதியானவர்களின் மாவட்ட வாரியான எண்ணிக்கை:
எர்ணாகுளம் 797, மலப்புரம் 764, கோழிக்கோடு 710, திருச்சூர் 483, பாலக்காடு 478, கொல்லம் 464, கோட்டயம் 423, திருவனந்தபுரம் 399, ஆலப்புழா 383, பத்தனம்திட்டா 216, கண்ணூர் 211, இடுக்கி 188, வயநாடு 152, காசர்கோடு 104. இவர்களில் 91 பேர் வெளியில் இருந்து மாநிலத்திற்குள் பயணம் செய்துள்ளனர்.
உள்ளூர்ப் பரவலில் தொற்று மாவட்ட வாரியாக எண்ணிக்கை:
எர்ணாகுளம் 609, மலப்புரம் 733, கோழிக்கோடு 668, திருச்சூர் 464, பாலக்காடு 269, கொல்லம் 458, கோட்டயம் 419, திருவனந்தபுரம் 271, ஆலப்புழா 375, பத்தனம்திட்டா 165, கண்ணூர் 166, இடுக்கி 160, வயநாடு 141, காசர்கோடு 91.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை:
எர்ணாகுளம் 11, கண்ணூர் 10, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு தலா 5, பாலக்காடு மற்றும் வயநாடு தலா 4, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு தலா 3 தலா, மலப்புரம் 2, கோட்டயம் 1.
இன்று சோதனையில் தொற்றிலிருந்து மீண்டவர் மாவட்ட வாரியான எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 609, கொல்லம் 681, பத்தனம்திட்டா 167, ஆலப்புழா 919, கோட்டயம் 271, இடுக்கி 72, எர்ணாகுளம் 658, திருச்சூர் 680, பாலக்காடு 590, மலப்புரம் 740, கோழிக்கோடு 622, வயநாடு 79, கண்ணூர் 473, காசர்கோடு 158.
இதுவரை குணமானவர்கள்
கேரளாவில் இதுவரை 4,88,437 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். அதே நேரத்தில் 66,856 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிமைப்படுத்தல்
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 3,18,079 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3,01,749 வீடு அல்லது நிறுவனங்களின் கீழும், 16,330 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இவர்களில் 1,846 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாட்ஸ்பாட்டுகள்
ஆறு புதிய ஹாட்ஸ்பாட்கள் இன்று வரையறுக்கப்பட்டன. அதே நேரத்தில் மூன்று பகுதிகள் விலக்கப்பட்டன. தற்போது, மாநிலத்தில் 560 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.