

நாட்டின் முதல் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3-ம் கட்ட மனித பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் தன்னார்வலராக பதிவு செய்து கொண்ட ஹரியாணா மாநில சுகாதாத்துறை அமைச்சர் விஜ்ஜுக்கு இன்று மருந்து செலுத்தப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நம் நாட்டின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலுடன் சேர்ந்து ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இதன் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்து தற்போது 3-வது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக நாடுமுழுவதும் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஹரியாணா மாநில சுகாதாத்துறை அமைச்சர் விஜ், தானும் தன்னார்வலராக பதிவு செய்து கொண்டார். அம்பாலாவில் அவருக்கு தடுப்பு மருந்து இன்று செலுத்தப்பட்டது.