Published : 20 Nov 2020 07:02 AM
Last Updated : 20 Nov 2020 07:02 AM

ராமர் கோயிலுக்காக ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள்: சுரங்கத்தில் வெட்டி எடுக்க மாநில அரசு திட்டம்

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தேவையான கற்கள் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்தே சேகரிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் மாவட்டம், வம்சி பகாட்பூரில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள், அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள் ஆயிரம் ஆண்டுகள் வரை சிதையாமல் பலமுடன் இருக்கும் தன்மை கொண்டவை. செங்
கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை இந்த வகை கற்களால் கட்டப்பட்டவை.

வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்களை வெட்டி எடுக்க கடந்த 2016-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.

தடை காரணமாக ராமர் கோயில் கட்டுமானத்துக்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வெட்டி எடுப்பதில் தடங்கல் ஏற்பட்டது. இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, "அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு 3.5
லட்சம் முதல் 4 லட்சம் கியூபிக் அடி மணற்கற்கள் தேவைப்படுகிறது. இதில் 1.1 லட்சம் கியூபிக் அடி இளஞ்சிவப்பு மணற்கற்களை ராஜஸ்தானில் இருந்து ஏற்கெனவே கொண்டு வந்துவிட்டோம். மீதமுள்ள கற்களையும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தரை தளத்துக்கு தேவையான கற்களில் 45 சதவீத கற்களை செதுக்கிவிட்டோம்" என்றார்.

இந்த பின்னணியில் வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இளஞ்சிவப்பு மணற்கற்களை வெட்டியெடுக்க அனுமதி கோரி, மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில சுரங்க துறை இணைச் செயலாளர் ஓ.பி.கேசரா, சுரங்கத் துறை இயக்குநருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தின் நில வகைப்பாட்டை மாற்றி, கற்களை வெட்டி எடுக்க மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

பாரத்பூர் சுரங்க துறை தலைமை பொறியாளர் பி.எஸ்.மீனா கூறும்போது, "வனவிலங்குகள் சரணாலயத்தின் நிலை வகைப்
பாட்டை மாற்ற விண்ணப்பம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கற்களை வெட்டி எடுப்பது தொடர்பாக வனத்துறையுடன் இணைந்து 556 ஹெக்டேர் பரப்பளவை ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் ராமர் கோயிலுக்காக வம்சி பாரத்பூரில் இருந்து கற்களை வெட்டி எடுக்க அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தற்போது மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி ராமர் கோயிலுக்காக கற்களை வெட்டி எடுக்க முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x