கணவரின் வருமானம் அறிய மனைவிக்கு உரிமை உள்ளது: மத்திய தகவல் ஆணையம் கருத்து

கணவரின் வருமானம் அறிய மனைவிக்கு உரிமை உள்ளது: மத்திய தகவல் ஆணையம் கருத்து
Updated on
1 min read

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கணவரின் வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமைஉள்ளது என மத்திய தகவல்ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ரஹமத் பானு.இவரது கணவர் தனது வருமான விவரத்தை பானுவிடம் தெரிவிக்க மறுத்துள்ளார். இதையடுத்து, தகவல் அறியும் உரிமைசட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தனதுகணவரின் வருமான விவரத்தைதெரிவிக்குமாறு வருமான வரித்துறையிடம் கேட்டிருந்தார். ஆனால் 3-ம் நபரிடம் இதுபோன்ற விவரத்தை தெரிவிக்க முடியாது என வருமான வரித் துறை தெரிவித்தது. இதை எதிர்த்து ரஹமத் பானு மத்திய தகவல் ஆணையத்தில் (சிஐசி) மேல்முறையீடு செய்தார்.

இவரது மனுவை பரிசீலித்த சிஐசி, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கணவரின் மொத்த வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. ஆர்டிஐ சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவலை மூன்றாம் நபர் கோர முடியாது என்ற வாதத்தை சிஐசி ஏற்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரர் கோரும் விவரத்தை இந்த உத்தரவு கிடைத்த 15நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஜோத்பூர் வருமான வரித்துறைக்கு சிஐசி உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in