

இமாச்சலப் பிரதேசம் சிம்லா அருகே சராஹான் கிராமத்தில் நோமன் என்பவர் பலத்த காயங்களுடன் ஒரு லாரிக்குள் கிடந்தார். அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.
நோமனுடன் சென்ற உறவினர் இம்ரான் அஸ்கர் கூறும்போது, `மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியில் தாங்கள் பயணித்ததாகவும், அந்த லாரியை வழிமறித்த பஜ்ரங்கள் தொண்டர்கள் நோமனை அடித்து உதைத்ததாகவும்’ தெரிவித்துள்ளார்.
அந்த லாரியில் இருந்த நால்வரை, பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இமாச்சலப் பிரதேச காவல் துறையினர் கைது செய்தனர்.