

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் மினி பஸ் ஒன்று நேற்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து உதம்பூர் மாவட்ட காவல் துறை துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறிய தாவது:
ராம்நகருக்கு அருகே தல்சார் என்ற இடத்தில் சென்று கொண் டிருந்த ஒரு மினி பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். இதில் 14 பேர் பலியாயினர். காயமடைந்த 17 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
24 பேர் பயணம் செய்யக்கூடிய அந்தப் பேருந்தில் 31 பேரை ஏற்றிச் சென்றதும், வேகமாக ஓட்டியதுமே விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டிய தாகவும் பயணிகள் சிலர் கூறினர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த விபத்தில் பலியானவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர் களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங் கப்படும் என அரசு அறிவித் துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.