

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் பசு நல அமைச்சகத்தை உருவாக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்
இதுதொடர்பாக இன்று அவர் பதிவு செய்துள்ள ட்வீட்:
''மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டுக்காகவும் பசு நல அமைச்சகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஆகியன அங்கம் வகிக்கும்.
கோபாஷ்டமியான வரும் 22-ம் தேதி, அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும்''.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.