

எல்லை விரிவாக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாடு அல்ல இந்தியா, மாறாக உலக நலனில் நம்பிக்கை கொண்டுள்ள நாடு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேநகரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மகாராஷ்டிர கல்விச் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நமது நாடு தற்சார்பு அடைவதற்கு அறிவாற்றல், தொழில்முனைவோர், அறிவியல், தொழில்நுட்பம், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகள் அவசியமாகும். நாட்டைமுன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல அறிவியல் முன்னேற்றத் துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது நாட்டைவல்லரசாக மாற்ற அறிவாற்றலில் முதலிடத்தை பெற வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு நாம் எல்லை விரிவாக்க சிந்தனை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உலகில் எல்லை விரிவாக்க ஆசை பிடித்த நாடுகள் சில உள்ளன. ஆனால் நம் நாடு எல்லை விரிவாக்கத்தில் நம் பிக்கை கொண்ட நாடல்ல. மாறாக உலக நலனில் நம்பிக்கை கொண்ட நாடு. உலகம் ஒரு குடும்பம் என்பதில் நாம் நம் பிக்கை கொண்டுள்ளோம்.
சமூகத்தில் கடைசி நிலையில் இருப்பவருக்கும் கல்வி வழங் கப்பட வேண்டும். அதே நேரத்தில் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏற்றுமதி அதிகரிக்கவேண்டும்
நமது நாடு தற்சார்பு பெறு வதற்கு இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண் டும். எனது துறையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை நான் திரட்டியுள்ளேன். இறக்குமதி பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். கல்வியில் நாடு தற்சார்பு பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
இதனால் இந்தியர்கள் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டியஅவசியம் ஏற்படாது. சர்வதேசதரத்திலான பல்கலைக்கழகங் களை உருவாக்கும் திறன்கள் நம்மிடம் உள்ளன. மன உறுதி மற்றும் லட்சியம் மட்டுமே நமக்கு தேவை. இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.