

ஷீனாபோரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணி நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளம்பெண் ஷீனாபோரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, டிரைவர் ஷியாம் ராய், இந்திராணியின் 2வது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோர் கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனர்.
மும்பை போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு நேற்று மாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. உட னடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.