

மகாராஷ்டிராவில் 8 மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டன.
மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கரோனா வரைஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்டன. 8 மாதங்களாகத் திறக்கப்படாத நிலையில் இன்று திறக்கப்பட்டன.
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். அதுபோலவே ஷிர்டியில் உள்ள சாய்பாபா கோயில் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இல்லாத கோயில்கள் திறக்கப்படும் நேரம் குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். பக்தர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.