

ஆதார் வழக்கு விரைவாக விசாரிக் கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது விநியோகம், சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மட் டுமே ஆதார் அட்டையை பயன் படுத்த வேண்டும். அரசின் இதர திட்டங்களுக்கு ஆதார் கட்டாய மில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மறுபரி சீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் செலமேஸ்வர், பாப்தே, நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது பழைய உத்தரவை வாபஸ் பெற நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். எனினும் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
இதனிடையே ஆதார் வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்விடம் மத்திய அரசு நேற்று முறை யிட்டது.
மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது: ஆதார் வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதற்கு சாத்தியம் இல்லை.
இந்த வழக்கை 9 நீதிபதிகள் விசாரித்தால் மற்ற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படும். 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமிப்பது குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும். வழக்கு விசாரணை விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.