வீரமரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரருக்கு பிஎஸ்எஃப் இறுதி அஞ்சலி

பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உயிர்த் தியாகம் செய்த படை வீரருக்கு எல்லை பாதுகாப்புப் படையினர்  ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினர். | படம்: ஏஎன்ஐ
பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உயிர்த் தியாகம் செய்த படை வீரருக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினர். | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறலால் வீரமரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படைவீரருக்கு பிஎஸ்எஃப் ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியது.

காஷ்மீரில் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ராகேஷ் தோவல் கடந்த வெள்ளிக்கிழமை வீரமரணம் அடைந்தார்.

வீரமரணம் அடைந்த படைவீரருக்கு மலர் வளையம் வைக்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

காஷ்மீர் எல்லைப்புற பிஎஸ்எஃப் தலைமையகமான ஹம்ஹாமாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு காஷ்மீர் எல்லைப்புற பிஎஸ்எஃப் தலைவர் டாக்டர் ராஜேஷ் மிஸ்ரா ஐ.பி.எஸ் தலைமை தாங்கினார்.

பிஎஸ்எஃப் அதிகாரிகள், துணை அதிகாரிகள் மற்றும் காஷ்மீர் எல்லைப்புற படைகளைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளும் பிற படைகள் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் உயிர்த்தியாகம் செய்த படைவீரருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

கடந்த நவம்பர் 13 ம் தேதி, பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் தூண்டப்படாத பாகிஸ்தான் யுத்த நிறுத்த மீறலைத் தொடங்கியது, பீரங்கி, மோட்டார் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் பகுதிகளை கூட வேண்டுமென்றே குறிவைத்தது.

ராகேஷ் தோவலில் உயிர்த்தியாகம்

இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும்விதமாக உதவி ஆய்வாளர் ராகேஷ் தோவல் எதிரி மீது பீரங்கித் தாக்குலை நடத்தினார். இதனால் நாவுகம் செக்டரில் பாகிஸ்தான் தரப்பில் பெரும் சேதம் ஏற்படுகிறது.

துணிச்சலாக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தோவல் எதிரிகளின் துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டார். படுகாயத்துடன் அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர்பிரிந்தது.

பிஎஸ்எஃப் பீரங்கி படைப்பிரிவின் ராகேஷ் தோவல் ஜனவரி 2004 இல் பிஎஸ்எப்பில் சேர்ந்தார், ஆகஸ்ட் 2013 முதல் தற்போதைய பதவியில் இருந்தார். இவரது பெற்றோர், மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வருகின்றனர்.

எல்லைப் பாதுகாப்புப் படைக் குடும்பம் தனது துணிச்சலான உறுப்பினருக்கு வீர வணக்கம் செலுத்துகிறது, மேலும் அவர் தேசத்திற்காக அவர் செய்த தியாகத்திற்கு கடமைப்பட்டுள்ளது.

இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in