

உத்தரப் பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச் சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பெரிய பிரச்சினையாக உருவெ டுத்துள்ளது. நொய்டாவிலும், தாத்ரி கிராமத்திலும் மாட்டிறைச்சி சாப்பிட் டவர்கள் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று ஆக்ரா அருகில் உள்ள மைன்புரி மாவட்டம் நகாரியா கிராமம் அருகே வயல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த பசு மாட்டை சிலர் பிடித்துச் சென்று அருகில் உள்ள வீட்டில் வைத்து வதை செய்து கொன்றதாக தகவல் பரவியது.
உடனே கிராம மக்கள் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசுவின் உடல் கிடந்தது. இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் நகாரியா மற்றும் மைன்புரியில் கலவரம் ஏற்பட்டது. சிலர் கும்பலாக சென்று கடைகளுக்கு தீவைத்தனர்.
இதில் 12-க்கும் மேற்பட்ட கடை கள் எரிந்து சாம்பலானது. உடனே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். கலவரக்காரர்கள், போலீ ஸார் மீதும் கல்வீசி தாக்கினார்கள். போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
கல்வீச்சில் 7 போலீஸார் காயம் அடைந்தனர்.
நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 279 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மாட்டின் தோலை உரித்த 2 பேர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சியர் விளக்கம்
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்திரபால்சிங் கூறும் போது, "பசு மாடு ஒன்று வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. மாட்டின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த போது உடல்நிலை சரியில்லாமல் இறந்தது தெரியவந்துள்ளது.
21 பேர் கைது
பொதுவாக இறந்த விலங்குகளின் தோலை உரித்து எடுத்துவிட்டு உடலை மட்டும் அப்படியே வீதியில் வீசிச் செல்கின்றனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 279 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.