Last Updated : 12 Nov, 2020 03:55 PM

 

Published : 12 Nov 2020 03:55 PM
Last Updated : 12 Nov 2020 03:55 PM

‘‘தேஜஸ்வி யாதவ் வெரி குட் பாய்; ஆனால் வயதான பிறகு தான் பிஹாரை வழிநடத்த முடியும்’’- உமா பாரதி பேட்டி

பாஜக மூத்த தலைவர் உமா பாரதி இன்று போபாலில் செய்தியாளர்களை சந்தித்த காட்சி | படம்: ஏஎன்ஐ.

போபால்

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி ஒரு நல்ல பையன், உரிய வயது இருந்தபோதிலும், ஒரு மாநிலத்தை நடத்துவதற்கு அவருக்கு போதுமான அனுபவம் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்த போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி கூறியதாவது:

"தேஜஸ்வி நல்ல பையன், என்றாலும் அவர் மாநிலத்தை வழிநடத்த முடியாது. அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் இல்லை.தேஜஸ்விக்கு வயதாகும்போது தான் அவர் பிஹார் மாநிலத்தை வழிநடத்த முடியும்.

ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும வெற்றியடைந்திருந்தால் லாலு பிரசாத் யாதவ் பிஹாரை மீண்டும் காட்டாட்சி நிலைக்குத் தள்ளியிருப்பார். நல்லவேளையாக பிஹார் மாநிலம் கடைசிநேரத்தில் காப்பற்றப்பட்டுவிட்டது,

கமல்நாத் இந்தத் தேர்தலில் மிகச் சிறப்பாக போராடினார். அவர் என் மூத்த சகோதரரைப் போன்றவர். மிகவும் ஒழுக்கமான நபர். அவர் இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்தார். மற்றக் கட்சிகளின் பிரச்சாரத்தை எதிர்த்து மிகவும் தந்திரமாகப் போராடினார். ஒருவேளை அவர் தனது அரசாங்கத்தை இதேபோல் சிறப்பாக நடத்தியிருந்தால் பிரச்சினைகள் இருந்திருக்காது.''

இவ்வாறு பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தெரிவித்தார்.

ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்ததை அடுத்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்எல்ஏக்கள் வெளியேறினர். கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மார்ச் மாதம் வீழ்ந்தது. இதனை அடுத்து மேலும் சில எம்எல்ஏக்கள் விலகிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 28 இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களைப் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x