

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயி ரிழந்தனர். இதைத் தொடர்ந்து போர்ப் பதற்றம் ஏற்பட்டதால் எல்லையில் இரு நாடுகளுக்கும் வீரர் களையும் ஆயுதங்களையும் குவித்தன.
இதனிடையே, கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந் திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்தன. அதன்படிஇரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின் றனர். கடந்த 6-ம் தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எல்லையில் இரு நாடுகளின் வீரர்களும் கட்டுப்பாட்டுடன் நடக்க உடன்பாடு எட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
முதல்கட்டமாக இரு நாடுகளின் ராணுவங்களும் ஒரே நாளில் டாங்கிகள், கவச வாகனங்களை எல்லைக் கோட்டில் இருந்து வாபஸ் பெற வேண்டும். இரண்டாம் கட்டமாக லடாக் பான்காங் ஏரியின் வடக்குகரை பகுதியில் நாள்தோறும் 30 சதவீதபடை வீரர்களை இரு ராணுவங்களும் பின்வாங்கச் செய்ய வேண்டும். இந்திய வீரர்கள்,தான் சிங் தாபா நிலைக்கும் சீன வீரர்கள் பிங்கர் 8 நிலைக்கும் திரும்பிச் செல்ல வேண்டும்.
மூன்றாம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்கு கரையில் முகா மிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்கள் அவரவர் பழைய நிலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.படைகள் முறையாக வாபஸ் பெறப்படுகி றதா என்பதை இருதரப்பும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கலாம் என்றும் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங் கள் கூறும்போது, "சீன ராணுவத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. எனவே, படைகள் வாபஸ் பெறும் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக கண்காணிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் எச்சரிக்கையாக செயல்படுவோம்" என்று தெரிவித்தன.
இந்திய, சீன ராணுவ உயரதி காரிகள் இடையிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இருதரப்பு படைகளை வாபஸ் பெறுவது குறித்த திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.