உ.பி. இடைத்தேர்தல்: 6 இடங்களில் பாஜக வெற்றி; ஓரிடத்தை சமாஜ்வாதி கைப்பற்றியது

உ.பி. இடைத்தேர்தல்: 6 இடங்களில் பாஜக வெற்றி; ஓரிடத்தை சமாஜ்வாதி கைப்பற்றியது
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் நடந்த 7 இடைத்தேர்தலில் 6 தொகுதிகளை பாஜக கைபற்றியது. ஓரிடத்தில் மட்டும் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்குக் கடந்த 3-ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் எண்ணப்பட்டது. தொடக்கத்தில் தேர்தல் நடந்த 7 தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. சமாஜ்வாதி கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது. சமாஜ்வாதி கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் பெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 7 தொகுதிகளில் 6 இடங்களை பாஜக கைபற்றியது. ஓரிடத்தில் மட்டும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in