

மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் பாஜக 11 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாஜகவின் துளசிராம் சிலாவத் சான்வெர் தொகுதியீல் முன்னிலை வகிக்கிறார். ராஜ்வர்தன் சிங் தத்திகான் பட்னவார் தொகுதியிலும், முங்கோலியில் பிரஜேந்திர சிங் யாதவ், பியோராவில் நாராயண் சிங் பவார், சுவஸராவில் ஹர்திப் சிங், அசோக் நகர் தொகுதியில் ஜெய்பால் சிங் ஜஜ்ஜி ஆகியோர் பாஜகவில் முன்னில வகிக்கின்றனர்.
பாமோரியில் பாஜக வேட்பாளர் மகேந்திர சிங் சிசோதியா முன்னிலை வகிக்கிறார், லோதி, கர்ஸ்தேக, கோவிந்த் சிங் ஆகிய பாஜக வேட்பாளர்களும் முன்னிலை வகிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் விபின் வான்கெடே, ராஜேந்திர சிங் பாகெல், மற்ரும் அஜாப் சிங் குஷ்வாஹா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பாஜக ஆட்சியைத் தக்கவைக்க குறைந்தது 8 இடங்கள் தேவை என்ற நிலையில் 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.