

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிக்கு தனது மருமகள் உதவியதாக பாஜக முன்னாள் எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “ மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜோ பிடனின் அற்புதமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது. அதேபோல், கமலா ஹாரிஸின் வெற்றியும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் கமலா ஹாரிஸுடன் இருப்பவர் பிரீத்தி சின்ஹா எனது மருமகள். இவர் கமலா ஹாரிஸ் கட்சியின் இளைஞர் அணியுடன் இணைந்து வெற்றிக்காக பாடுபட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் எங்களது பிரீத்தியின் பங்கு அதிகமாக இருந்தது.வெற்றிக்கு பாடுபட்ட ப்ரீதாவுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.