

கேரளாவில் இன்று 7,201 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று கேரள அரசின் மக்கள் செய்தித் தொடர்புத்துறை அலுவலர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:
''கேரளாவில் இன்று புதிதாகக் கரோனா தொற்று 7,201 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்டிருந்த 7,120 பேர் அந் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்றைய தொற்றில் தொடர்பு மூலம் 6,316 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றின் ஆதாரம் 728 பேருக்குத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் 61 பேர் மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் ஆவர். கரோனா தொற்று தொடர்பான 28 இறப்புகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டு, மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,668 ஆக உயர்ந்துள்ளது.
புதிய தொற்றாளர்களின் மாவட்ட வாரியான புள்ளிவிவரம்:
எர்ணாகுளம் 1,042, கோழிக்கோடு 971, திருச்சூர் 864, திருவனந்தபுரம் 719, ஆலப்புழா 696, மலப்புரம் 642, கொல்லம் 574, கோட்டயம் 500, பாலக்காடு 465, கண்ணூர் 266, பத்தனம்திட்டா 147, காசர்கோடு 94. இடுக்கி 108, வயநாடு 113.
நோய் கண்டறியப்பட்டவர்களில் 96 பேர் வெளியில் இருந்து மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.
உள்ளூர்ப் பரவலில் தொற்று ஏற்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்:
எர்ணாகுளம் 767, கோழிக்கோடு 923, திருச்சூர் 840, திருவனந்தபுரம் 554, ஆலப்புழா 683, மலப்புரம் 606, கொல்லம் 565, கோட்டயம் 497, பாலக்காடு 300, கண்ணூர் 187, பத்தனம்திட்டா 121, வயநாடு 100, இடுக்கி 87, காசர்கோடு 86.
மாவட்ட வாரியாகத் தொற்று ஏற்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:
எர்ணாகுளம் 19, கோழிக்கோடு 8, திருச்சூர் 7, மலப்புரம் 6, கண்ணூர் 5, திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா தலா 4, காசர்கோடு 3, ஆலப்புழா 2.
கொல்லம், இடுக்கி, பாலக்காடு தலா 1.
இன்று நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மாவட்ட வாரியான எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 761, கொல்லம் 562, பத்தனம்திட்டா 196, ஆலப்புழா 549, கோட்டயம் 612, இடுக்கி 100, எர்ணாகுளம் 1,010, திருச்சூர் 423, பாலக்காடு 286, மலப்புரம் 1,343, கோழிக்கோடு 1,343, வயநாடு 106, கண்ணூர் 313, காசர்கோடு 210.
மாநிலத்தில் இதுவரை 3,95,624 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது மொத்தம் 83,261 கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 3,07,107 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் 2,86,322 பேர், மருத்துவமனைகளில் 20,785 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 2,445 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 50,49,635 மாதிரிகள் இதுவரை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 64,051 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
38 பகுதிகள் விலக்கப்பட்டிருந்தாலும், திருவனந்தபுரம், வயநாடு, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 14 புதிய ஹாட்ஸ்பாட்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இப்போது கேரளாவில் 612 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.