கரோனா; குணம் அடைந்தோர் விகிதம் 92.41 சதவீதம்

கரோனா; குணம் அடைந்தோர் விகிதம் 92.41 சதவீதம்
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, புதிய தொற்றுகளை விடவும், புதிதாக குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் போக்கு நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 50,356 ஆக இருக்கிறது. புதிதாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 53,920 ஆக இருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களாக இந்த போக்கு தொடர்ந்து வருகிறது. இப்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5.16 லட்சமாக இருக்கிறது.

கடந்த ஐந்து வாரங்களாக தினமும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தின் போது, ஒரு நாளைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 73,000-க்கும் அதிகமாக இருந்தது. இது இப்போது 46,000-ஆக குறைந்திருக்கிறது.

மேற்கூறிய போக்கால் தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு காரணமாக இன்றைக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,16,632 ஆக இருக்கிறது. மொத்த பாதிப்புகளுடன் உடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6.11 % மட்டுமே.

மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 78,19,886 ஆக இருக்கிறது. தேசிய குணம் அடைந்தோர் விகிதம் 92.41% ஆக இருக்கிறது. குணம் அடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோருக்கு இடையேயான இடைவெளி இப்போது 73,03,254 ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 577 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in