Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

அமைச்சர்கள் உட்பட களத்தில் 1,204 வேட்பாளர்கள்; பிஹாரில் இன்று இறுதிகட்ட தேர்தல்: 243 தொகுதிகளிலும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பிஹார் சட்டப்பேரவைக்கு இறுதிகட்ட மாக 78 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட 1,204 வேட்பாளர்கள் களத் தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை 10-ம் தேதி நடக்கிறது.

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 28-ம் தேதி முதல்கட்டமாக 71 தொகுதிகளிலும், கடந்த 3-ம் தேதி 2-ம் கட்டமாக 94 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில், மீதமுள்ள 78 தொகுதிகளில் இறுதிகட்ட தேர்தல் இன்று நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட் டணி சார்பில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சிகள் மகா கூட்டணியை அமைத்து தேர் தலை சந்திக்கின்றன. இதுதவிர அண்மையில் காலமான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் அந்தக் கட்சி தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

இறுதிக்கட்ட தேர்தலில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 110 பேர் பெண்கள். ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவின் மகள் சுஹா சினி (பிஹாரிகஞ்ச் தொகுதி) காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மண்டல் கமிஷன் தலைவரும், முன் னாள் முதல்வருமான பி.பி.மண்டலின் பேரன் நிகில் மண்டல் (மாதேப்புரா தொகுதி) ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நரேந்திர நாரா யண் யாதவ், பிஜேந்திர பிரசா யாதவ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச் சாவடிகளில் போலீ ஸாருடன் ராணுவத்தினரும் பாது காப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 78 தொகுதிகளில் 33,782 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,999 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

பிஹார் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வோடு செயலாற்ற தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அனைத்து வாக்குச்சாவடியிலும் சானிடைசர் கொண்டு வாக்காளர்கள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்யவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 10-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கே முன்னணி நிலவரம் தெரியவரும்.

கடைசி தேர்தல்

புர்னியா மாவட்டம் தம்டஹா தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, ‘‘கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கான கடைசி நாளில் பிரச்சாரம் செய்கிறேன். இது எனது கடைசி தேர்தலாகவும் இருக்கும். எல்லாம் நல்லதாகவே இருந்தது. முடிவும் நல்லதாகவே இருக்கும். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எங்கள் குறிக் கோள்’’ என்றார்.

‘இதுதான் எனக்கு கடைசி தேர்தல்’ என்று நிதிஷ் பேசியிருப்பது பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘நிதிஷ் 14 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி நிதிஷ் பேசியிருப்பது இதுவே முதல்முறை’ என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

‘சிற்றுண்டி பரிமாறாதீர்’

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் வரை குடும்பத்தில் ஆண் களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறா தீர்கள் என்று பெண்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து இறுதிநாள் பிரச்சாரத் தில் அவர் பேசியதாவது:

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் கள் அதிகாலையிலேயே தயாராகி வாக்குச்சாவடிக்கு சென்று வாக் களியுங்கள். பின்னர், வீட்டுக்கு வந்து காலை சிற்றுண்டியையும் மதிய உண வையும் தயார் செய்யுங்கள். வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கும் வரை குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு காலை சிற்றுண்டியை பெண்கள் பரிமாற வேண்டாம். வாக்களித்துவிட்டு வந்து சிற்றுண்டி சாப்பிடுங்கள் என்று குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் பெண்கள் கண்டிப்பாக கூறுங்கள். பெண்களின் வேண்டுகோளை ஏற்று மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தினேன். அதற்கான ஆத ரவை பெண்கள் காட்ட வேண்டிய நேரம் இது.

இவ்வாறு நிதிஷ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x