

குவஹாத்தி உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைக் பயன்படுத்தி, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான, நீதிபதி சஞ்சய் குமார் மேதி, நீதிபதி நானி தாகியா மற்றும் நீதிபதி மனிஷ் சவுத்ரி ஆகியோரை கவுகாத்தி நீதிமன்றத்தின் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
இந்த மூன்று நீதிபதிகளும் பதவியேற்றுக் கொள்ளும் நாளில் இருந்து இவர்களது நியமனம் அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிக்கைகளை மத்திய நீதி மற்றும் சட்டத்துறை 2020 நவம்பர் 5 அன்று வெளியிட்டுள்ளது.