Published : 06 Nov 2020 05:04 PM
Last Updated : 06 Nov 2020 05:04 PM

அரசு துறைகளுக்காக புதிய கண்டுபிடிப்புகள்; போட்டியில் 1300 பேர் பங்கேற்பு: வெற்றியாளர்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்ளால் 36 மணி நேரம் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி (Gov-Tech-Thon 2020) கடந்த 1-ம் தேதி நிறைவடைந்தது.

இந்த மெய்நிகர் போட்டிக்கு நாடு முழுவதும் இருந்து, 390 குழுக்களைச் சேர்ந்த 1300 பேர் பங்கேற்றனர். இந்த போட்டிக்கான இணையதளத்தை இரண்டு வாரங்களில் 15 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

மத்திய அரசின் வேளாண் அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவை போட்டியாளர்களுக்கு ஐந்து சவால்களை விடுத்திருந்தது.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வெவ்வேறான பருவத்தில் விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கும் மாற்றுப் பயிர் கண்டறிதல், பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமில்லா விதைகளை கண்டறிதல், ஆவணங்களை ஒரே முறையில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் கைபேசி செயலி, வெப் கேமிரா மற்றும் தொலை தூர கண்காணிப்பு மென்பொருள் மூலம் ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் உபகரணம், வாகனங்களின் தகுதிகளை தானாக பரிசோதிக்கும் உபகரணம் போன்றவற்றை போட்டியாளர்கள் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தன.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கூறிய 100 குழுக்களைச் சேர்ந்த 447 போட்டியாளர்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், அரசுத் துறையை சேர்ந்த 27 நடுவர்கள் குழுவினர் தீவிர பரிசீலனை செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

‘ராபர்ட் பாஸ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘பிட் பார் பியூச்சர்’ என்ற குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர்கள் வாகனத்தின் தகுதியை பரிசோதிக்கும் மாதிரி கருவியை உருவாக்கியிருந்தனர்.

இரண்டாம் பரிசு வதோதரா ஐஐஐடியைச் சேர்ந்த ‘ஹேக்டெமான்ஸ்’ என்ற குழுவுக்கு கிடைத்தது. இவர்கள் தேர்வுகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் தீர்வை கூறியிருந்தனர். பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரஞ்சு குழுவுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. இவர்கள் தரமான விதைகளுக்கு சான்றளிக்கும் தனிச்சிறப்பான தீர்வை வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x