Published : 05 Nov 2020 04:16 PM
Last Updated : 05 Nov 2020 04:16 PM

சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மயானங்களைப் புதுப்பிக்கும் ஆந்திர மனிதர்: நெகிழும் மக்கள்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் ராவ், தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மயானங்களைப் புதுப்பித்து வருகிறார்.

குளிர்பான விற்பனையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய வெங்கட் ராவ், தற்போது பிரபல தனியார் நிதி நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக உயர்ந்துள்ளார். தான் வந்த பாதையை மறக்காதவர், கோதாவரி ஆற்றங்கரை அருகே ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள கொட்டிலிங்கலா மற்றும் இன்னஸ்பேட்டா மயானங்களைக் கைலாச பூமி என்ற பெயரில் புதுப்பித்துள்ளார்.

அப்போது கொட்டிலிங்கலா மற்றும் இன்னஸ்பேட்டா பகுதிகள் இரண்டும் நாய்களும் கழுகுகளும் வேட்டையாடும் இடமாக இருந்தன. அவற்றைப் புதுப்பித்த வெங்கட் ராவ், அங்கே சிலைகள், மரங்கள், கோயில்களை எழுப்பியுள்ளார். அதோடு நூலகத்தையும் அங்கேயே உருவாக்கினார்.

கைலாச பூமி

ஒவ்வொரு மயானத்திலும் சுமார் 400 உடல்களை எரியூட்டலாம். அத்தோடு நில்லாமல், தினந்தோறும் அங்கே சென்று பராமரிப்புப் பணி நடைபெறுவதைக் கவனிப்பதையும் வெங்கட் ராவ் வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் உடல்களை மயானத்துக்கு எடுத்து வருவதற்காக கைலாச ரதங்கள் என்ற பெயரில் வாகனங்களையும் வாங்கி இலவசமாக அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ராஜமகேந்திரவரம் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மகா காளி, மகா காளீஸ்வரர் ஆலயத்தையும் எழுப்பி வருகிறார். இதற்காகத் தன் சொந்தப் பணத்தில் ரூ.14 கோடியை இதுவரை செலவிட்டுள்ளார்.

சம்பாதிக்கும் பணத்தைப் பொதுச் சேவைக்காகச் செலவிடும் வெங்கட் ராவின் மனிதநேயத்தைக் கண்டு அங்கு வசிக்கும் மக்கள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். வெங்கட் ராவின் தன்னலமற்ற சேவைக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பிரதீபா ராஜீவ் புரஸ்கார் விருதும் இவரை அலங்கரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x