

பிரசாத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு குருவாயூரில் சுற்றுலா வசதி மையத்தை தொடங்கியுள்ளது.
மத்திய சுற்றுலாத்துறையின் பிரசாத் திட்டத்தின் கீழ், ‘குருவாயூரின் வளர்ச்சி, கேரளா’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட சுற்றுலா வசதி மையத்தை மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன், மாநில கூட்டுறவு, சுற்றுலா மற்றும் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய பிரகலாத் சிங் பாட்டீல், இந்திய அரசு விடுவித்த நிதியை உகந்த அளவில் பயன்படுத்தி சர்வதேசத்தரத்துக்கு இணையாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டுத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றுலாத்துறையின் கீழ் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும், ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
‘குருவாயூரின் வளர்ச்சி, கேரளா’ என்ற திட்டத்துக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் ரூ.45.36 கோடியில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிதியில் ரூ.11.57 கோடியில் குருவாயூரில் சுற்றுலா வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது.