கடந்த ஆறு ஆண்டுகளில் பெற்ற தொகைக்கு முறையாக கணக்கு காட்டாத அமைப்புகளுக்கு நிதி உதவியை நிறுத்தியது மகளிர் ஆணையம்

கடந்த ஆறு ஆண்டுகளில் பெற்ற தொகைக்கு முறையாக கணக்கு காட்டாத அமைப்புகளுக்கு நிதி உதவியை நிறுத்தியது மகளிர் ஆணையம்
Updated on
1 min read

மத்திய மகளிர் மற்றும் குழந் தைகள் நலத்துறையின் கீழ் தேசிய மகளிர் ஆணையம் செயல் படுகிறது. இதன் சார்பில் நாடு முழுவதிலும் மகளிர் நலம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்ற கூட்டங் கள் நடத்துவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

பகிர்ந்தளிக்கப்படும் இந்த தொகை பல மாநில அமைப்பு களால் தவறாகப் பயன்படுத்தப்படு வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய கடந்த 19-ம் தேதி மகளிர் ஆணையம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.ஆணையத்திடம் பெற்ற தொகைக்கு முறையாக கணக்கு காட்டாத அமைப்புகளுக்கு நிதி யுதவியை நிறுத்தி வைப்பதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித் துள்ளது.

2007-2012 காலகட்டத்தில் நிதி பெற்று, அவற்றுக்கு செலவு கணக்கு காட்டாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 முதல், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு கணக்குகள் காட்டப்படவில்லை.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, அசாம், ஹரியாணா, மகாராஷ்டிரா, பிஹார் மாநிலங்களில் இருந்து அதிக எண் ணிக்கையிலான நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள் ளன. மணிப்பூர், மேற்கு வங்கம், உத்தராகண்ட், குஜராத், சத்தீஸ்கர், திரிபுரா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான அமைப்புகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து தேசிய மகளிர் ஆணைய நிர்வாகிகள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ ரூ.15 லட்சத் துக்கான கணக்குகள் ஒப்படைக் கப்படவில்லை. இதில், சில செலவுக் கணக்குகள் ஏற்கத்தக்க தாக இல்லை. நாடு முழுவதிலும் இருந்து எங்கள் துறையின் பல் வேறு அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் தொகை பல கோடி களை தாண்டும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது’ என்றனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு சுமார் ரூ. 1,000 கோடி அளவுக்கு நிதி உதவி அளிப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in