Published : 01 Nov 2020 05:29 PM
Last Updated : 01 Nov 2020 05:29 PM

ராமர் வாழ்ந்தாரா? என கேள்வி எழுப்பியவர்களை மறந்து விடாதீர்கள்: பிஹார் தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்

பாட்னா 

ராமர் வாழ்ந்தாரா என கேள்வி எழுப்பியவர்களை மறந்து விடாதீர்கள் என பிரதமர் மோடி பேசினார்.

பிஹாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28,நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு நிறைவடைகிறது. இதையொட்டி பிஹாரில் உள்ள அரசியல் கட்சிகள் மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பிஹாரில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று சாப்ரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். பிரதமர் மோடியுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் உடனிருந்தார். கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சாம்ரானில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சாத் பூஜை வரை ஏழைகளுக்கு இலவச தானியங்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளோம். சாத் பூஜையை எப்படி கொண்டாடுவது என்று தாய்மார்கள் யாரும் கவலைப்படக்கூடாது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் என்பது தெளிவாகியிருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தற்போது தொடங்கியுள்து. ராமர் வாழ்ந்தாரா என கேள்வி எழுப்பியவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களிடம் எந்த தகவலும் இல்லை. அவர்களிடம் தர்க்க ரீதியான கருத்துகளும் இல்லை. அரசியலுக்காக எதையும் எதிர்ப்பது மட்டும் தான் அவர்களது கொள்கை. தவறான கருத்துக்களையும், பய உணர்வையும் பரப்புவது தான் அந்த கட்சிகளின் பணியாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x