துப்பாக்கியில் தவறாகக் கைபட்டு குண்டு பாய்ந்ததால் போலீஸ் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

துப்பாக்கியில் தவறாகக் கைபட்டு குண்டு பாய்ந்தததால் பணியில் இருந்த காவலர் உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஹைதராபாத்தில் இன்று காலை நடந்துள்ளது.

பணியில் இருந்த சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.எஃப்) காவலர் தனது துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஹைதராபாத்தில் உள்ள ராணிகுஞ்ச் என்ற பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஒரு பொதுத்துறை வங்கியினுடைய பண பெட்டகக் கட்டிடத்தின் வாயிலில் இக் காவலர் (வயது 31) பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது தற்செயலாக அவரிடம் இருந்த செல்ப் லோடிங் ரைபிள் (எஸ்.எல்.ஆர்) துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி அவரது கன்னத்தில் பாய்ந்தது. இதனால் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்ட கட்டிடத்தின் பாதுகாப்புப் பிரிவின் உள்ளே இருந்த மற்ற மூன்று காவல்துறையினர் வெளியே வந்தனர். அவர் இறந்து கிடந்த காட்சியைக் கண்டனர். அவர் இறந்து கிடந்ததை அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பாதுகாப்பாளர் பொறுப்பிலிருந்து மற்ற காவலர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்டக் காவலர் தன்னை அறியாமல் தவறுதலாக கை பட்ட நிலையில் குண்டுபாய்ந்து உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த காவலரின் மற்ற விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in