ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் பற்றி விரைவில் அறிவிப்பு: பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் பற்றி விரைவில் அறிவிப்பு: பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்
Updated on
1 min read

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) குறித்த அறிவிக்கை பிஹார் தேர்தல் நடைமுறைகளுக்கு பின் வெளியாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஹார் தேர்தல் நடைமுறை கள் முடிந்த, அடுத்த சில நாட் களில் ஓஆர்ஓபி குறித்த அறிவிக்கை வெளியாகும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இதை வெளியிட முடியாத நிலையில் உள்ளோம். முன்னாள் ராணுவ வீர்களுக்கு இது தீபாவளி பரிசாக இருக்குமா என்று கேட்கிறீர்கள். தீபாவளிக்கு (நவம்பர் 11) முன் அறிவிக்கை வெளியிட முயற்சி செய்கிறேன்” என்றார்.

5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பிஹாரில் நவம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் நவம்பர் 12-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓஆர்ஓபி திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் ரத்தக் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பினர்.

ஓஆர்ஓபி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் 7 கடுமையான குறைபாடுகள் இருப்பதாக அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த குறைபாடுகளை நீக்காவிடில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற வார்த்தை களுக்கு அர்த்தமில்லாமல் போகும். இந்த விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சர் மாற்றி மாற்றி பேசுகிறார்” என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in