Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது ஆந்திராவில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பும்போது மலையில் இருந்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், டாகூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், வெலுகுபண்டா கிராமத்தைச் சேர்ந்த மணப் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் இரவு, கோகவரம் தண்டிகொண்டா மலைப்பகுதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் நேற்று அதிகாலை மணமக்கள் மற்றும் இருவீட்டாரின் உறவினர்கள் மொத்தம்22 பேர் ஒரு வேனில் மணமகனின்வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மலையில் இருந்து இறங்கும்போது, வேனின்பிரேக் செயலிழந்தது. இதனால், வேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட மொத்தம்8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். இதில் மணமக்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து கோகவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “வேன் விபத்து குறித்துஅறிந்தேன். திருமண வீட்டாரின் உறவினர்கள் 8 பேரை இழந்து வாடுகின்றனர். இவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து ராஜமுந்திரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவோருக்கு அரசு உதவி புரிய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x